உலகெங்கிலும் பல ஆரய்ச்சி நிறுவனங்கள் தன்னிச்சையாகவோ அல்லது உலக சுகாதார அமைப்பின் கீழோ, கோவிட்- 19 பெருந்தோற்று தடுப்பு மருந்து ஆராய்சிகளை செய்து வரும் நிலையில்,இந்தியா பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே, கோவிட்- 19 நோயிலிருந்து மீண்ட ஒருவரின் இரத்த பிளாஸ்மாக்களை (இரத்த செல்களை ஏந்தி செல்லும் ஒரு திரவம்) தீவிர தொற்று கொண்ட நோயாளியின் உடலில் உட்செலுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியைத் அதிகரிக்க செய்யும் முயற்சிக்கு பிளாஸ்மா சிகிச்சை என்றழைக்கப்படுகிறது.
Convalescent Plasma Theraphy என்றழைக்கப்படும் இந்த சிகிச்சைமுறை, கடந்த காலங்களில் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிளாஸ்மா சிகிச்சையின் அடிப்படை என்ன?
சமிபத்தில், அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மருத்துவ ஆராய்சிக்காக அனுமதிக்கப் பட்ட இந்த சிகிச்சை முறையானது, மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வழியில், மீட்கப்பட்ட ஒரு நோயாளியின் இரத்த பிளாஸ்மாவை மற்றொரு நோயாளிக்கு பரிமாற்றுவதை உள்ளடக்குகிறது.
பிளாஸ்மா என்னும் திரவத்தில் தான் இரத்த அணுக்கள் மிதக்கின்றன.பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய கூறுகளையும் இந்த பிளாஸ்மா தன்னகத்தே வைத்துள்ளது. அண்டிஜென்( பாக்டேரியா, வைரஸ்) நமது உடம்பிற்குள் படையெடுத்து வரும்போது, அதை தோற்கடிப்பதற்காக நமது பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் உருவாகுகின்றன. நோய்க்கிருமிகள் தோற்கடிக்கப்பட்டதும், சில இரத்த அணுக்கள் நினைவக உயிரணுக்களாக செயல்படுகின்றன. இதன் விளைவாக, அதே வகையான நோய்க்கிருமிகள் பிற்காலத்தில் வரும் போது, நோய்க் கிருமிகள் அடையாளப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திகள் விரைவாக உருவாக்கப்பட்டுகின்றது.
ஆயத்த நிலையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை செலுத்தி உடலை நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் (Passive Immunity) ஒரு வகையே இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். உண்மையில், இந்த சிகிச்சை முறையை நாம் காலம் காலாமாக பயன்படுத்தி வருகின்றோம்.உதாரணமாக, டிஃப்தீரியா போன்ற சில நோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திகள்,குதிரைகளில் உருவாக்கப்பட்டு பின்பு மனிதர்களுக்குள் செலுத்தப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட நோய்க்கிருமியை உடலுக்குள் அறிமுகப்படுத்துவதன்(பி.சி.ஜி தடுப்பூசி போன்றவை) மூலம், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு, ஆன்டிபாடிகளை உருவாக்குவது, உடலுக்குள் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி என்பதாகும் (Active Immunity)
கைட்டன் மற்றும் ஹால் எழுதிய மருத்துவ உடலியல் பாடநூலில்,“ ஆன்டிஜென்களுக்கு எதிராக தீவிரமாக நோய்த்தடுப்பு பெற்ற மனிதர்களிடம் இருந்து (அல்லது) சில விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட இரத்தத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்ட டி-செல்கள் (அ) ஆன்டிபாடிகளை உட்செலுத்தும் போது, ஒருவர தற்காலிக நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உட்செலுத்தப்பட்ட ஆன்டிபாடிகள் மூலம் குறைந்தது இரண்டு-மூன்று வாரங்களுக்கு நோய் கிருமியில் இருந்து பாதுகாக்கப்படுகிறார். அதே போன்று, மனிதர்களிடமிருந்து மாற்றப்பட்ட டி-செல்கள் மூலம், ஒருவர் சில வாரங்கள் நோய்க் கிருமியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளல்லாம். விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட டி-செல்கள் மூலம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நோய்க் கிருமியில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம்.
இந்தியா தற்போது என்ன செய்ய திட்டமிட்டுள்ளது?
நாட்டின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது, கோவிட் -19 நோயிலிருந்து மீண்ட நபர்களிடமிருந்து, இரத்த பிளாஸ்மாக்களை தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கான வரைவு நெறிமுறையை உருவாக்கி வருகிறது.
இது ஒரு மருத்துவ பரிசோதனையாக செயல்படுத்த இருக்கிறோம். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள (அ) வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு முதலில் பரிசோதிக்கப்படும். இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஒப்புதலும் எங்களுக்குத் தேவைப்படும். இது சோதனை அடிப்படையில் செய்யப்பட உள்ளது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளும் இந்த சிகிச்சை முறைக்கு சாதகமாக பதில் தருகின்றன. ” என்று ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் தெரிவித்தார்.
கோவிட் -19 குறித்து ஆலோசனை வழங்குவதற்காக கேரளா அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் டாக்டர் அனூப் குமார் கூறுகையில்,”கோவிட்-19-ல் இருந்து மீண்ட சிலருடன் தான் பேசியதாகவும், அவர்கள் பிளாஸ்மா சிகிச்சை சோதனையின் ஒரு பகுதியாக இருக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
பிளாஸ்மா பரிமாற்ற செயல்முறை மிகவும் எளிதானதாக இருந்தாலும், மீட்கப்பட்ட நபரின் பிளாஸ்மாவில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை சரிபார்க்கத் தேவைப்படும் கருவிகள் கிடைப்பது குறித்து கேரளா அரசு கவலை தெரிவித்திருந்தது. இந்த சாதனங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை, ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும்.
இத்தகைய சிகிச்சையில் மற்ற நாடுகளின் நிலை என்ன?
ஏப்ரல் 8 ம் தேதி அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,” பொது சுகாதார அவசரநிலை காலத்தின் போது, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களும், ஆராய்ச்சியாளர்களும் கோவிட்-19 நோயில் இருந்து மீண்டவரிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மாக்களை நிர்வகிக்கவும், ஆய்வு செய்வதற்கமான பரிந்துரை வழிகாட்டுதல்களை வெளியிட்டது”. அமெரிக்காவில் கோவிட் -19 பிளாஸ்மா சிகிச்சை முறை இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு ஆய்வுப் பொருளாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 8 ம் தேதி அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,” பொது சுகாதார அவசரநிலை காலத்தின் போது, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களும், ஆராய்ச்சியாளர்களும் கோவிட்-19 நோயில் இருந்து மீண்டவரிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மாக்களை நிர்வகிக்கவும், ஆய்வு செய்வதற்கமான பரிந்துரை வழிகாட்டுதல்களை வெளியிட்டது”. அமெரிக்காவில் கோவிட் -19 பிளாஸ்மா சிகிச்சை முறை இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு ஆய்வுப் பொருளாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூடத்தில், பத்து நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பைலட் பிளாஸ்மா மருத்துவ சிகிச்சை குறித்து அறிக்கையை சீன ஆராய்ச்சியாளர்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த ஆய்வுக்குறிப்பில், “பத்து நோயாளிகளிடம் இருந்த காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி உட்பட அனைத்து அறிகுறிகளும் பிளாஸ்மா பரிமாற்றம் செய்த 1 முதல் 3 நாட்களுக்குள் மறைந்துவிட்டன அல்லது பெரிதும் மேம்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெக்கானிக்கல் வெண்டிலேட்டர் உதவியை பெற்று வந்த மூன்று பேர், அதிக ஓட்டம் கொண்ட நாசி கானுலா ஆக்ஸிஜனேற்றத்தைப் பெற்று வந்த மூன்று பேர் , வழக்கமான குறைந்த ஓட்டம் கொண்ட நாசி கானுலா ஆக்ஸிஜனேற்றத்தைப் பெற்று வந்த இருவர் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பின், மெக்கானிக்கல் வென்டிலேட்டரில் இருந்த இரண்டு பேர் -அதிக ஓட்டம் கொண்ட நாசி கானுலா ஆக்ஸிஜனேக்கு மாற்றப்பட்டனர், ஒரு நோயாளிக்கு கொடுக்கப்பட்ட உயர் ஓட்டம் நாசி கானுலா நிறுத்தி வைக்கப்பட்டது . மேலும், வழக்கமான நாசி கானுலா ஆக்ஸிஜனேற்றத்துடன் சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர் தொடர்ச்சியான ஆக்ஸிஜனேற்றம் முறையில் இருந்து இடைப்பட்ட ஆக்ஸிஜனேற்ற செயல்முறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அந்த ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. எந்தவொரு மோசமான பின்விளைவுகளும் இதுவரை யாருக்கும் காணப்படவில்லை என்பதே இதில் மிக முக்கிய விஷயமாக கருதப்படுகிறது.
கடந்த காலங்களில், இந்த பிளாஸ்மா சிகிச்சை எப்போது முயற்சிக்கப்பட்டது? கடந்த காலங்களில், ஏற்பட்ட பல சிக்கலான நோய்களுக்கு இந்த சிகிச்சை முயற்சிக்கப்பட்டது. சமீபத்திய நிகழ்வாக, எபோலா நோயைக் குறிப்பிடலாம். எபோலா பரவலின் போது, இந்த சிகிச்சை முறையை “அனுபவ சிகிச்சை முறையாக” பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு விரிவான வழிகாட்டுதல் ஆவணத்தை வெளியிட்டது.
அதில், ” எபோலா வைரஸ் நோய்க்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லையென்றாலும், நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் கட்டத்தில் இருந்த நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட முழு இரத்தமும்,எபோலா நோயுடைய சிறியளவிலான மக்களிடம் நம்பிக்கைக்குரிய முடிவுகளுடன் அனுபவ சிகிச்சையாக பயன் படுத்தப்பட்டு வருகிறது” என்றும் கூறப்பட்டிருந்தது.