புதன், 1 ஏப்ரல், 2020

சமூக இடைவெளி மக்களுக்கு மட்டும்தானா...? அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு

அரசு மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்ய வந்தநிலையில், அவர்களுடன் வந்த அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நெருங்கியபடியே இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையை கதர் மற்றும் காதிதுறை அமைச்சர் பாஸ்கரன் இன்று ஆய்வு செய்தார், அவருடன் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மானாமதுரை எம்.எல் ஏ நாகராஜன் ஆகியோர் வந்தனர் அமைச்சர் காரைவிட்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தவுடன் பின்னால் கட்சியினர், மருத்துமனை ஊழியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் பின்னால் இடைவெளி விடாமல் கூட்டமாக நெருக்கமாக வந்தனர்.

மருத்துவமனையில் தற்போது அமைக்கபட்டு வரும் கொரோனா வார்டு தயாராகும் பணியை பார்த்து விட்டு அமைச்சர் கிளம்பினார். கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நிமிடத்திற்கு ஒருமுறை அரசு மற்றும் அதிகாரிகள் கூறிக்கொண்டே இருக்க, அவர்கள் அதனை மறந்துவிட்டனர் என்று மருத்துவமனைக்கு வந்த சிலர் கமெண்ட் அடித்தனர்.
credit 
https://tamil.news18.com/news/coronavirus-latest-news/minister-and-officials-not-followed-social-distance-in-sivagangai-sam-273881.html