புதன், 1 ஏப்ரல், 2020

வாணியம்பாடியில் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் எட்டுபேரை தனிமைப்படுத்தி அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி பகுதியில் கொரோனா கணக்கெடுப்பு பணி இன்று காலை முதல் இன்று வீடுவீடாக அனைத்து பகுதிகளிலும் நடந்தது. காய்ச்சல், இருமல் என்று பாதிக்கப்பட்டு யாரேனும் உள்ளார்களா? என்று சுகாதாரத்துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.


இப்பணிகளில் சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு சென்ற கணக்கெடுப்பு
பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களுடைய கணக்கெடுப்பு சீட்டை எடுத்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டுகளை பறித்து சிறை பிடித்தனர்.

தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்ததை அடுத்து, இது தொடர்பாக தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டு அப்பகுதியில் பிரச்சினையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பிரச்சனை செய்து தப்பி ஓடிய பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

credit news18tn.com