வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது
இந்தியாவின் நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், திங்களன்று வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவ்வால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்று அறியப்படுகின்றது. மேலும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) கொரோனாவை பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஏழு மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு வகையான வவ்வால்களின் தொண்டை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
credit indiaexpress.com