சனி, 11 ஏப்ரல், 2020

மக்களிடம் போலீஸ் கடுமையான அணுகுமுறை - மனித உரிமை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மக்களிடம் போலீஸ் கடுமையான அணுகுமுறை - மனித உரிமை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Chennai high court : ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வாகனங்களில் வருபவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்கின்றனர்


ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் போது பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க வசதி ஏற்படுத்த கோரிய மனு குறித்து 4 வாரங்களில் விளக்கம் அளிக்க தமிழக டிஜிபி-க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது… ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வாகனங்களில் வருபவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்கின்றனர் எனவும், இது தொடர்பாக புகார் அளித்த தகுந்த வசதியை ஏற்படுத்தி தர உத்தரவிடக் கோரி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக ஐந்தாம் ஆண்டு மாணவர் ஆப்ரீன் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இதுகுறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
credit indianexpress.com