புதன், 10 ஜூன், 2020

எல்லையில் இருந்து படைகளை பின்வாங்கிய சீன ராணுவம்!

எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய-சீனா ராணுவ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

இந்திய - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி மற்றும் கல்வான் பள்ளத்ததாக்கு பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவம் வீரர்களை குவித்தது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவ படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டனர். அங்கு பதற்றமான சூழுல் நிலவிய நிலையில், எல்லைப் பிரச்சனை தொடர்பாக இருதரப்பு நாடுகளுக்கிடையே ராணுவ துனை தளபதி மட்டத்திலான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்தியாவின் சார்ப்பில் லெப்டினன் காமண்டர் ஹரீந்தர் சிங் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 

இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருநாடுகளின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு, ரோந்துப் புள்ளி மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட்ஸ் ஸ்பிர்ங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா ரணுவம் 2 முதல் 2.5 கிலோ மீட்டர்கள் வரை பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் இந்தியா ராணுவமும் இப்பகுதியில் உள்ள படைகள் மற்றும் ரோந்து வாகனங்களை பின்னுக்கு நகர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது இருநாட்டு ராணுவமும் பின் வாங்கியுள் கல்வான் பள்ளத்தாக்கு, ரோந்துப்புள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.