சனி, 11 ஜூலை, 2020

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

கன்னியாகுமரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடக்கத்தில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து பிப்ரவரி 1ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை , வழக்கு பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக , சென்னையில் உள்ள  சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.