வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

முகப்பரு பிரச்னைக்கு கொய்யா இலை.. எப்படி யூஸ் பண்றது பாருங்க வறண்ட சருமத்தை

  கொய்யா இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன.  இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை  மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.

கொய்யா இலையின் சில அழகுக் குறிப்புகள் இங்கே..

எண்ணெய் சருமத்திற்கு    

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.

ஒரு கிண்ணத்தில், இரண்டு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் எடுத்து, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும்.

இதை உங்கள் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

டிப்ஸ்: அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சருமத்தை தெளிவாக வைத்திருக்கவும் இதை தினமும் பயன்படுத்தவும்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

மஞ்சள்- சிட்டிகை

ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்.

எப்படி செய்வது?

கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும்.

இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

டிப்ஸ்: சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

தோல் எரிச்சலுக்கு

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஒரு கப் தண்ணீர்

எப்படி செய்வது?

ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை ஒரு கப் தண்ணீருடன் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

தீயை அணைத்து, தண்ணீரை வடிகட்டி இலைகளை அகற்றவும்.

வடிகட்டிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.

ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.

உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால், உங்கள் முகத்தை கழுவிய பின் இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.

கொசு கடித்தால் அல்லது மற்ற தோல் எரிச்சல் இருந்தால் அதன்மீத ஸ்பிரே செய்யலாம்

டிப்ஸ்: முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு மாஸ்க் பயன்படுத்த விரும்பினால், டீ ட்ரீ ஆயில் சில துளிகள் சேர்க்கவும்.

தலைமுடிக்கு

முடி உதிர்வதை தடுக்கவும் கொய்யா இலை பயன்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் உருவாக்கும் கொய்யா இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். 

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் சேர்த்து, சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு இது மிதமான சூட்டில் இருக்கும் போது, உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்வது இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது, இது நுண்ணறைகளுக்கு அதிக ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. பிறகு ஒரு டவலால் தலைமுடியை போர்த்தி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.

உங்கள் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள்.

source https://tamil.indianexpress.com/lifestyle/beauty-tips-in-tamil-guava-leaf-for-skin-and-hair-496025/