வியாழன், 18 ஆகஸ்ட், 2022

கூகுளிடம் இருக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்: நீக்குவதற்கான வழிகள் இதோ!

 

நாம் எல்லாவற்றிற்கும் கூகுளை பயன்படுத்துகிறோம். சிறிய தகவலை பெறுவதற்கு கூட கூகுளை பயன்படுத்துகிறோம். அந்தவகையில் நாம் கூகுளில் தேடும் அனைத்து தகவல்களும் சேமித்து வைக்கப்படும். Search Box-ல் சில வார்த்தைகளைத் டைப் செய்யும்போது கூகுள் suggestion நிறைய தகவல்களை கொடுக்கும். இது நீங்கள் முந்தைய தேடிய தகவலை சேமித்து வைத்து அடுத்து தேடும் தகவலுக்கு ஏற்றவாறு காண்பிக்கிறது.

உங்களைப் பற்றிய தகவலையும் கூட சேமிக்கிறது. உங்கள் தேடலை வைத்து இதை சேமிக்கிறது. நீங்கள் என்ன தேடுகிறீர்கள், எந்த இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், உங்கள் தனிப்பட்ட விரும்பம் என்ன என எல்லாவற்றையும் ஆய்வு செய்து தரவுகளை சேமிக்கிறது.

இந்தத் தகவல் உங்களின் குக்கீயில் சேமிக்கப்பட்டு கூகுளின் டேட்டா சென்டரில் சேமிக்கப்பட்டுள்ள உங்களின் சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் நீங்கள் அதிகம் தேடிய தகவல் ஆகியவற்றை வைத்து விளம்பரங்கள் காண்பிக்கப்படும். கூகுளில் தேடும் போது தகவல்கள் தானாகவே சேமிக்கப்படும். இந்த தகவலை பிரவுசரில் இருந்து நீங்கள் நீக்கிக் கொள்ளலாம். அதற்கு,

  1. Google தேடல் Removal page-ல் (https://support.google.com/websearch/answer/9673730), requirements சரிபார்க்கவும்.
  2. தகவல்களை சரிபார்த்த பிறகு, டெலிட் ஆப்ஷனை கொடுக்கலாம்.
  3. டெலிட் புரோசஸ் முடிந்தபின், உங்கள் இமெயில் மூலம் கன்பர்மேசன் கேட்கப்படும். அதனை கொடுக்கும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை ஏற்று, கூகுள் முந்தைய தகவல்கள் அழிக்கப்படும்.


source https://tamil.indianexpress.com/technology/google-browser-information-deleting-hacks-495205/