திங்கள், 6 நவம்பர், 2017

​குளிரும் குற்றாலம் - குவியும் சுற்றுலா பயணிகள்!

Image

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அருவியில் குளிக்க இன்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால், இன்று காலை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்