திங்கள், 6 நவம்பர், 2017

நெல்லுக்கும், கரும்புக்கும் பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன் - விஜயகாந்த் November 5, 2017

நெல்லுக்கும், கரும்புக்கும் பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார். 

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விஜயகாந்த் தலைமையில் தேமுதிக சார்பில் திருப்பூர் அருகிலுள்ள ஏரிபாளையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டுவண்டியில் வந்த விஜயகாந்த், பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். 

விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தான் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற போராடுவதாக தெரிவித்தார். நெல்லுக்கும், கரும்புக்கும் ஏதாவது பிரச்னை என்றால் சும்மாவிடமாட்டேன் என தெரிவித்த விஜயகாந்த், காமராஜர் காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை திமுகவும், அதிமுகவும் செயல்படுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். 

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் குறித்த நல்ல அறிவிப்பு விரைவில் வரும் என தான் நம்புவதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்