சனி, 9 டிசம்பர், 2017

மழைக்கு வாய்ப்பில்லை... December 8, 2017

Image

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால், வங்கக் கடலில் இருந்து பருவ மழை காலத்தில் வீசும் காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

Related Posts: