இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் அரசு அமைந்தால் நீட் தேர்வு கிடையாது எனவும் பாஜக அரசு அமைந்தால் நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும் எனவும் குறிப்பிட்ட சிதம்பரம், இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என தேர்தல் தேதியை குறிப்பிட்டார்.
மேலும், மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா, அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
source ns7.tv