சனி, 13 ஏப்ரல், 2019

மேற்குவங்கத்தில் மிக மிக தீவிரமாக ஏதோ நடக்கிறது - உச்சநீதிமன்றம் April 12, 2019

source : ns7.tv
Image
சுங்கத்துறை ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்குவங்கத்தில் மிக மிக தீவிரமாக ஏதோ நடந்து வருவதாக உச்சநீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மேற்குவங்க அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
சுங்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா நீதிபதி அமர்விடம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடந்த மார்ச் 15-16 அன்று சுங்கத்துறை அதிகாரிகள் மேற்குவங்க காவல்துறையால் பணிசெய்ய விடாமல் தடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிமன்ற அமர்வு மேற்குவங்கத்தில் மிக மிக தீவிரமாக ஏதோ நடந்தேறி வருவதாக குறிப்பிட்டனர்.
கடந்த 16ம் தேதி அதிகாலை 1.10 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்திற்கு, சர்வதேச விமானத்தில் வந்த இரண்டு பெண்மணிகளின் கைப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட முற்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் கேட்ட அந்த அதிகாரிகளை மிரட்டியதுடன், பணிசெய்யவிடாமல் அந்த பெண்மணிகள் தடுத்துள்ளனர். அந்த பெண்மணிகளின் அழைப்பின் பேரில் அங்கு வந்த மேற்குவங்க காவல்துறையினர் சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டியதுடன் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அந்த பெண்மணிகளில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியின் மனைவியாவார். இவர் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுவிற்கு மேற்குவங்க அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் தாங்களாகவே முன்வந்து சுயோமோட்டோ வழக்காக விசாரிக்க இயலும் என நீதிபதிகள் கூறினர்.