ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

மேற்குத்தொடர்ச்சி மலையில் நேரிட்ட காட்டுத்தீ...மூலிகைகள் நாசம்! April 14, 2019

Image
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேரிட்ட காட்டுத்தீ, வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகைகள், மற்றும் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 
மாங்கரை அருகே காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ நேரிட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால், அங்கிருந்து மருதமலை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காட்டு தீ பரவியது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இரவு நேரம் ஆனதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மருதமலை பகுதியில் மட்டும் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று முதல் மீண்டும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts: