சனி, 13 ஏப்ரல், 2019

PUBG விளையாட்டை தடை செய்தது நேபாளம்! April 12, 2019

source ns7.tv
Image
சர்ச்சைக்குரிய விளையாட்டாக உருவெடுத்து வரும் PUBG விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்துள்ளது நேபாள அரசு.
சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக பிரபலமாக விளங்கி வருவது PUBG என்ற ஆன்லைன் விளையாட்டு.  செல்போன்களிலும், ஆன்லைனிலும் விளையாடி வரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. TikTok போலவே இதுவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்ககும் PUBG விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்துள்ளதாக நேபாள தொலைத்தொடர்பு ஆணையத்தின் துணை இயக்குனர் சந்தீப் அதிகாரி கூறியுள்ளார்.
நேபாள புலனாய்வு அமைப்பின் வலியுறுத்துலுக்கு இணங்க PUBG விளையாட்டை அனைத்து இணைய சேவை, செல்போன் சேவை மற்றும் இணைய சேவை அளிக்கும் நிறுவனங்களும் இந்த விளையாட்டுக்கான ஸ்டீரீமிங்கை தடை செய்யும்படி தொலைத்தொடர்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடையானது ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.
PUBG விளையாட்டானது கடந்த 2017ம் ஆண்டும் தென்கொரியாவின் Bluehole Inc என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.