செவ்வாய், 16 ஜனவரி, 2018

பிட்காயின் ஆன்லைன் வாலட் ஹேக் : ரூ. 2 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் திருடப்பட்டதாக புகார்




2018-01-16@ 13:11:01
டெல்லி :  பிட்காயின்களுக்கான ஆன்லைன் வாலட்டை ஹேக் செய்து சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் திருடப்பட்டுள்ளது.paytm போன்ற வாலேட்டுகள் மூலம் பணத்தை ஆன்லைனில் பரிமாற்றம் செய்வது போன்று, பிளாக் வால்ட் என்னும் நிறுவனம் பிட்காயின்களின் ஆன்லைன் பரிமாற்றத்திற்கான சேவையை வழங்குகிறது.

இந்நிலையில் பிளாக் வாலெட் நிறுவனத்தின் சர்வரை ஹேக் செய்து இணையதளத் திருடர்கள் அதிலிருந்து வாடிக்கையாளர்களின் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான பிட்காயின்களை திருடி உள்ளனர்.இதனையடுத்து பிளாக் வாலெட் நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் பிட்காயின் மதிப்பிற்கான பணத்தை தாங்களே திரும்ப வழங்குவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.பிட்காயின்களை திருடிய ஹேக்கர்களை பிடிக்க சர்வதேச நிறுவனங்களின் உதவியை பிளாக் வாலெட்  நிறுவனம் நாடியுள்ளது.   
www.dinakaran.com/News_Detail.asp?Nid=367617