முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
காலை ஏழரை மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மத்திய அமைச்சராக, ப. சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். தனியார் தொலைக்காட்சி தொடங்குவதற்கு, அந்நிய முதலீட்டை குறைத்து, அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பிரதிபலனாக, கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், சிதம்பரம் வீடுகளில் ஏற்கனவே அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இன்று விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டெல்லியில் உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.