திங்கள், 15 ஜனவரி, 2018

மோடியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை January 15, 2018

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், சர்ச்சை வெடித்துள்ளது. 

அமேதி மாவட்டத்தில், பிரதமர் மோடியை, 10 தலை கொண்ட ராவணனாக சித்தரித்து, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கையில் அம்புடன், பிரதமர் மோடியை தாக்குவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 

ஹிந்தி வாசகத்துடன், பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை கேலி செய்யும் விதமாக, காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு, பாஜக, கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Image