திங்கள், 15 ஜனவரி, 2018

எழுத்தாளர் ஞாநி காலமானார் January 15, 2018

Image

மூத்தப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார் அவருக்கு வயது 64.

மூச்சுத் திணறல் காரணமாக நள்ளிரவு 12.30 மணிக்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, அவரது உயிர் பிரிந்தது, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததாக, உறவினர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, கே.கே.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

எழுத்தாளர் ஞாநியின் மனைவி பெயர் பத்மா. இத்தம்பதியினருக்கு மனுஷ் என்ற ஒரு மகன் உள்ளார். ஞாநி தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.