திங்கள், 8 ஜனவரி, 2018

சோபியா: உலகின் முதல் ரோபோ குடிமகள் January 8, 2018

Image

மனிதர்களின் மிக சவாலான  பிரச்சனைகளை சரி செய்வதற்கு, செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ரோபோக்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் சோபியா என்ற ரோபோ.

49 வயதான ஹான்சனால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, அவரின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ரியாத் டெக் மாநாட்டில், சோபியாவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபிய அரசு.


மனிதர்களைப்போலவே, சோபியாவிற்கு 3D கைகள், கால்கள் இருக்கின்றன. மனிதனின் தோல் போன்ற அமைப்பில், சோபியாவிற்கு, நானோடெக் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ரப்பர் போன்ற சதை இருக்கும். கண்களில் இருக்கும் கேமராவும், மார்புபகுதியில் இருக்கும் சென்சாரும், பார்வைக்கு உதவும் கருவிகளாக இருக்கின்றன.

சோபியாவினுள் பொருத்தப்பட்டிருக்கும் செயலி, மூளை போல் செயலாற்றி, சோபியாவின் அனைத்து செய்கையையும் கட்டுப்படுத்தும். பேசும்பொழுது ஏற்படும் சில இடைநிறுத்தங்கள் தவிற சோபியா, மிகவும் நட்புறவுடனும், ஈடுபாட்டுடனும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதர்களைப்போல் இருக்கும் சோபியாவைப்பொல இன்னும் சில ரோபோக்களை ஹான்சன் ரோபோட்டிகஸ் தயாரித்துக்கொண்டிருப்பதாகவும், இம்மாதிரியான ரோபோக்கள், மனிதனுக்கும் இயந்திரங்களுக்கும் இருக்கும் உறவை நீடிக்கும் எனவும் ஹான்சன் கூறியுள்ளார்.