வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

Feb 1 2019 இடைக்கால பட்ஜெட்

2019 இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
➤தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர்.
➤ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை!
➤வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.6 லட்சம் நிதியுதவி!
➤ரயில்வே துறைக்கு மூலதனமாக ரூ.65000 கோடி ஒதுக்கீடு!
➤விவசாயிகள் சம்மான்நிதித் திட்டத்தின்கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் நேரடி மானிய வங்கிப் பரிமாற்ற அடிப்படையில் வழங்கப்படும்!
➤மீனவர்கள் நலனுக்காக தனித் துறை உருவாக்கப்படும்!
➤கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை வழங்கப்படும்!
➤அகல ரயில்பாதைகளில் ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லாத நிலையை எட்டியுள்ளது!
➤பசு பாதுகாப்புக்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!
➤தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க திட்டம்!
➤அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் ரூ. 100 பிடித்தம் செய்யப்பட்டு, 60 வயதிற்கு பிறகு, மாதம் ரூ.3000 வழங்கும் புதிய பென்சன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது!

source: ns7.tv