இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சேலம் சிறுமி ராஜலட்சுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த நவம்பர் 8ம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமுருகன் காந்தி, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக கூறி, பிப்ரவரி 28ம் தேதி நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி திருமுருகன் காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன் காந்திக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்
source: ns7.tv