புதன், 20 மார்ச், 2019

வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்! March 20, 2019

Image
மேச்சேரி அருகே வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 
சேலம் மாவட்டம் அரங்கனூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த முறை அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், அடிப்படை வசதிகள் இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 
அரசின் பல்வேறு திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளதால் ஊரின் எல்லையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரக்கூடாது எனவும், மீறி உள்ளே நுழைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படாது எனவும் எச்சரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv

Related Posts: