வியாழன், 21 மார்ச், 2019

45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்றுத்தரும் நெசவாளர்...! March 21, 2019

Image
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கு 45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்பித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வரும் நெசவாளர் காரப்பனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கை அசைவுகள் ஏதும் இன்றி கால்களை மட்டுமே பயன்படுத்தி நெசவு செய்யும் வகையில் தறியினை கண்டு பிடித்து அதன் மூலம் பெண்களுக்கு காரப்பன் பயிற்சி அளித்து வருகிறார். இவரின் இந்த நடவடிக்கையை பாராட்டி அண்மையில் மத்திய அரசு இவரை தேசிய கைத்தறி பயிற்சியாளராக நியமித்துள்ளது.
பயிற்சிக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சொந்தமாக கைத்தறிகள் அமைக்க பெண்களுக்கு காரப்பன் உதவி செய்து வருகிறார்.  இதன் மூலம் வீட்டில் இருந்தவாறே நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தொழில் முனைவோராக மாற்றி வரும் நெசவாளர் காரப்பனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.