அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர கூட்டத்தை நடத்தியது.
லக்னோவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாரியத்தின் 51 உறுப்பினர்கள் மட்டுமின்றி, மத்திய வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண்பதற்காக மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அந்தக் குழுவில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மத்தியஸ்த குழுவினரிடம் என்னென்ன விஷயங்களை முன்வைப்பது என்பது தொடர்பாக இன்றைய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது
credit : ns7.tv