புதன், 13 மார்ச், 2019

2019 நாடாளுமன்ற தேர்தலை பற்றி தெரிந்து கொள்ள உதவிடும் செயலிகள்...! March 13, 2019


Image
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள், வேட்பாளர்கள்,தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணையதளங்களை வெளியிட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் ஏப்.1  முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள், வேட்பாளர்கள்,தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணையதளங்களை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், CVigil,Voter Helpline Mobile App,Election Monitoring Dashboard, Samathan மற்றும் Suvitha ஆகிய செயலிகள் மற்றும் இணையதளங்களை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தல் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்க CVigil என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வாக்காளர்கள் பயன்படுத்தி  தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதும் கட்சிகள் மீதும் புகார்கள் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்ட 90 நிமிடங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், தேர்தல் ஆணையம் வெளியிடும் முக்கிய அறிவிப்புகளை அறிந்து கொள்ளுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் Voter Helpline Mobile App செயிலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாக்குச்சாவடி தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள election monitoring dashboard என்ற இணையத்தினை பொது மக்கள் பயன்படுத்த ஏதுவாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Samathan  செயலி மூலமாக வாக்காளர்களால் தேர்தல் தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும், புகார்களையும் அளிக்க இயலும்.  மேலும், வாக்களர்களுக்கு மட்டுமல்லாது வேட்பாளர்களுக்கும் உதவிடும் வகையில் சில செயலிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. Suvitha எனும் செயலியை பயன்படுத்தி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களின் நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்.

credit ns7.tv