திங்கள், 18 மார்ச், 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல்! March 18, 2019

source: ns7.tv
Image
நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. 
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில், 91 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் அடுத்தமாதம் 11-ஆம் நடைபெறவுள்ளது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 25-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 26-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. இதனையொட்டி, தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மாநிலங்களின் 175 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலும் இன்று தொடங்கியது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்கி, 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழகத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நாளை தொடங்குகிறது.