Home »
» பிரேசிலில் அழிவின் விளிம்பில் உள்ள அமேசானிய மனட்டீ உயிரினம்: இனப்பெருக்கத்துக்காக வனப்பகுதி ஏரியில் விடப்பட்டது
பிரேசில் நாட்டில் INPA - அமேசானிய ஆராய்ச்சி தேசிய நிறுவனம் கடந்த வாரம் அமேசானிய நீர்வழி பாலூட்டிகளின் திட்டத்தை நிகழ்த்தினர். இந்த நிறுவனம் இந்த அறிய வகை பாலுட்டியை பராமரித்து வருகிறது. கடத்த சில தினங்களுக்கு முன்னர் அமோனொனாஸ் மாநிலத்தின் பியகாகு-புருஸ் ரிசர்வ் பகுதியில் உள்ள ட்ராபினோ ஏரியில் இந்த அறிய வகை பாலூட்டியானா அமேசானியன் மனட்டியை இனவிருத்திக்காக அப்பகுதி ஏரியில் விட்டனர். அழிவின் விளிம்பில் இருக்கும் அமேசானியன் மனட்டி என்றழைக்கப்படும் கடல் வாழ் பாலூட்டி வகை உயிரினத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த உயிரினம் அமேசான், பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளில் வாழும் உயிரினம். ஏரியில் விடப்பட்ட இந்த உயிரினத்தின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்காணித்து வருகின்றனர்.