credit :ns7.tv
ஜனநாயக நாட்டில் குடிமகனுக்கு இருக்கும் மிகப்பெரிய கடமை வாக்களிப்பதே. நாம் செலுத்தும் வாக்கே உள்ளூர் கவுன்சிலர் முதல் பிரதமர் வரை தேர்தெடுப்பதில் பங்காற்றுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் 15வது பிரதமரை தேர்தெடுக்க வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா? விவரங்கள் சரிபார்த்தல், எந்த பூத்தில் நம்முடைய வாக்கை செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதுடன், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், தொகுதி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களையும் ஆன்லைனில் செய்யக்கூடிய வசதியை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வளைத்தளத்தில் நமது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதன் வாயிலாக மேற்கூறப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
இதற்கான இரண்டு வழிமுறைகள்ள் குறித்து அறிந்து கொள்வோம்:
1. முதலில் https://electoralsearch.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்
2. உங்களது பெயர், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாநிலம், மாவட்டம், தொகுதி போன்ற தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் நமது முழு விவரங்களை சரிபார்க்கலாம். இது ஒரு முறை
3. அடுத்த முறையில் EPIC number எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண், மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்வதன் வாயிலாகவும் நமது முழு விவரங்களை சரிபார்க்கலாம்.