செவ்வாய், 19 மார்ச், 2019

நீதிமன்றம் விதித்த காலக்கெடு : அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி! March 19, 2019


Image
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், எரிக்ஸன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகையை முகேஷ் அம்பானி செலுத்தினார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்புகளை பராமரிக்க சுவீடனின் சோனி எரிக்ஸன் நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
ஒப்பந்தத்தின்படி பணம் செலுத்தாத நிலையில், தங்களிடம் வாங்கிய 550 கோடி கடன் தொகை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாக எரிக்ஸன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவைத் தொகையான 462 கோடியை மார்ச் 19ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அனில் அம்பானி மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டிருந்தது. 
நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அனில் அம்பானியின் 462 கோடி கடன் தொகையை அவரது சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவரது சகோதரர் அனில் அம்பானி, தனது சகோதருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

credit ns7.tv