செவ்வாய், 19 மார்ச், 2019

அதிமுக - திமுக கூட்டணியில் யாரை எதிர்த்து யார் மோதுகிறார்கள்? March 19, 2019


Image
நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் முக்கிய தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியில் யாரை எதிர்த்து யார் மோதுகிறார்கள் என்ற விவரம் 
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ் களம் இறங்கியுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் களம் இறங்கியுள்ள நிலையில் அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் வேட்பாளராக சாம்பால் போட்டியிடுகிறார். 
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் தற்போதைய எம்.பியும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை எதிர்கொள்கிறார் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் வைத்திலிங்கம்
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை எதிர்த்து பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி களம் காண்கிறார்.
வேலூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார் திமுக பொருளார் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த். அவரை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாத்துரைக்கும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே போட்டி நிலவுகிறது
கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் இறங்கியுள்ளார்  திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி. அவரை எதிர்கொள்கிறார் தேமுதிக துணைச் செயலாளரும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து அதிமுக சார்பில் தியாகராஜன்  போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜி.செல்வம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான ஸ்ரீரமேஷை எதிர்த்து களம் காண்கிறார் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி
விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகளை கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை எதிர்த்து பாமக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் வடிவேல் ராவணன்
திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் ஞான திரவியத்தை எதிர்த்து அதிமுக சார்பில் களம் காண்கிறார் தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன்
credit ns7.tv