வெள்ளி, 29 மார்ச், 2019

பறக்கும் படையிடம் கதறும் சிறு வியாபாரிகள்

நெல்லை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யார் பணத்தை கொண்டு சென்றாலும் அதற்குரிய ஆவணம் இல்லை என்றால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்கின்றனர். இது சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. சிறிய வியாபாரிகளுக்கு ஆவணங்கள் என்று பெரிய அளவில் கிடையாது. காய்கறி, பழம், பால் போன்றவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆவணம் இன்றி தாங்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினரிடம் இழந்து விட்டு வெறும் கையுடன் திரும்புகின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்து தொழில் ெசய்ய பணமின்றி திண்டாடுகின்றனர்.


பணத்தை பறக்கும் படையினரிடம் இருப்பதை கொடுத்து வெறும் கையுடன் நிற்கும் வியாபாரிகள், “வேணாம்... விட்டுறு.... அழுதுறுவேன்......” என கதறும் நிலையில் உள்ளனர். ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராத சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டுவதை நிறுத்த வேண்டும். தேர்தலை காரணம் காட்டி இவர்களின் தொகைகளை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்ல உச்சவரம்பு ரூ.50 ஆயிரம் என இருப்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source dinakaran