source: ns7.tv
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில்,18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 17வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ,திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறாது என்றும், இத்தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படாது எனவும் கூறினார்.
காலியாக உள்ள பெரம்பூர், தஞ்சை, பூவிருந்தவல்லி, சாத்தூர் உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.இத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் போட்டியிடலாம் என கூறினார்.
பணப்பட்டுவாடாவை தடுக்க இம்முறையும் வருமானவரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என,சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.