வியாழன், 21 மார்ச், 2019

நியூசிலாந்து தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை நாட்டை விட்டு வெளியேற்றிய துபாய் அரசு! March 20, 2019

Image
நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ஆதரிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை பணி நீக்கம் செய்ததுடன் நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது துபாய் அரசு!
கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து அங்கு வழிபாட்டில் இருந்தவர்கள் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 5 இந்தியர்கள்  உள்ளிட்ட 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட Brenton Tarrant என்ற 28 வயது ஆஸ்திரேலிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த தாக்குதலுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தின் Transguard என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நியூசிலாந்து தாக்குதலை ஆதரிக்கும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமீரக அரசு கருத்து பதிவிட்ட அந்த நபரை பணிநீக்கம் செய்துள்ளதுடன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றியது. கருத்து பதிவிட்ட நபரின் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

source ns7.tv