சனி, 23 மார்ச், 2019

விதிகளை மீறியதாக கூறி ஓலா கேப் சேவைக்கு தடை விதித்துள்ளது கர்நாடக அரசு! March 23, 2019

credit ns7.tv
Image
அரசின் விதிகளை மீறிய ஓலா கேப் சேவைக்கு ஆறு மாதங்கள் தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  
கார் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கவே ஒலா நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வரும் 2021ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.
இந்நிலையில், ஓலா சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சேவை அளித்து வருவது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 
மேலும், இந்த புகார்கள் குறித்து ஓலா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு ஓலா நிறுவனம் சரியான பதிலை தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே ஓலா நிறுவனத்தின் உரிமம் ஆறு மாத காலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், பெங்களூரில் ஓலா சேவைகளை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஓலா சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையிலும் இன்று பெங்களூரில் ஓலா போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது