வெள்ளி, 29 மார்ச், 2019

ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45! March 28, 2019

credit ns7/tv
Image
பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 29 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளும், 4 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் வரும் திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளது.  இதில் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா,ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் 4 செயற்கைக்கோளும், பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக எமிசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும், இதன் மொத்த எடை 436 கிலோ என்றும், இதன் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.