திங்கள், 11 மார்ச், 2019

543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்!" -தேர்தல் ஆணையம் March 10, 2019

source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india/10/3/2019/election, 
Image
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதன்முறையாக வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஏப்ரல் 11ந் தேதி தொடங்கி மே 19ந்தேதி வரை 7 கட்டங்களாகத் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனக் கூறினார். ஏப்ரல் 11ந்தேதி முதல் கட்டத் தேர்தல் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா,  உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.   

2ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேவா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 
4ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ந்தேதி, பீகார், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தபிரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 
5ம் கட்ட வாக்குப்பதிவு மே 6ந்தேதி,மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம்,மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6ம் கட்டத் தேர்தல் மே12ந்தேதி, பீகார், ஹரியானா, டெல்லி,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 7மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற உள்ளது.