புதன், 13 மார்ச், 2019

ஜீன்ஸ் பேன்டை மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய இளைஞர்! March 12, 2019

credit : ns7.tv
Image
நியூசிலாந்தில் கடலில் விழுந்த ஒருவர் தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள தொலாகா பே என்ற கடற்பகுதியில், படகு மூலம் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்னே முர்கே என்பவர் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்துவிட்டதை அவரது சகோதரர் கவனிக்கவில்லை. சற்று நேரத்தில் ஆர்னேவை காணவில்லை என்பதை அறிந்த ரோவே மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
சுமார் 4 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பின் ஆர்னே மூர்கே-வை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். தமது ஜீன்ஸ் பேன்டின் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப் போட்டு, அதில் காற்றை நிரப்பி மிதவையாக பயன்படுத்தி உயிர்தப்பியதாக ஆர்னே மூர்கே தெரிவித்தார்.