வெள்ளி, 15 மார்ச், 2019

மொபைல்போன் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை! March 15, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கையில் இருக்கும் அணுகுண்டை போன்று, மொபைல்போன் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இணையதள பயன்பாட்டால் தீங்குகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகவும், Parental window என்ற மென்பொருளை பயன்படுத்தி, அதனை முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டனர். கையில் இருக்கும் அணுகுண்டை போன்று, மொபைல்போன் மிகப் பெரிய ஆபத்தாக உள்ளதாக கூறிய நீதிபதிகள், அதன் நன்மை, தீமைகள் குறித்து தெரியாததன் விளைவே பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினர். 
ஆபாச இணையதளங்கள், மதுப்பழக்கம் ஆகியவை சமூகத்தை சீரழித்துவிடும் என எச்சரித்த நீதிபதிகள், இவற்றை முறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதுகுறித்து இணையசேவை வழங்குவோர் சங்கச் செயலர் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
credit ns7.tv