சனி, 30 மார்ச், 2019

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்! March 30, 2019


Image
ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். 
இந்த நிலையில், ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடியே 28 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

credit  : ns7.tv

Related Posts:

  • Hadis எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி "ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதல… Read More
  • சிம் கார்டு -STC,ZAIN,MOBILY தாய் நாடு திரும்பும் சவூதியில் பணியாற்றும் சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கை ...!சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,சமீப காலம… Read More
  • ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு. (:::நூ அ ன்:::) 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி�� வளர 12… Read More
  • இஸ்லாத்துக்கு அவப் பெயர் - செய்தி ஐஎஸ்ஐஎஸ் தினமும் மனிதர்களை அறுத்து அதனை வீடியோவாக்குகிறது. உலகமெங்கும் இதனால் இஸ்லாத்துக்கு அவப் பெயர் - செய்தி முசுலிம்கள் பல இடங்… Read More
  • Whatsapp எச்சரிக்கை...! எச்சரிக்கை...!! ஜெர்மன் தொலைக்காட்சிச் செய்தியில் தகவலொன்று சொல்லப்பட்டு உள்ளது.தனி மனிதச் சுதந்திரத்துக்கு எதிரான, அதிர்ச்சிச் செய்தி அது. பலர், தனிப்பட்ட … Read More