வெள்ளி, 29 மார்ச், 2019

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! March 29, 2019


Image
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஏற்கனவே சூடு பிடித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர், தேர்தல் பிரச்சாரத்தில் கூடுதலாக அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
credit ns7.tv

Related Posts:

  • Quran & Hadis நபிகளாரின் குணங்கள்: (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவர… Read More
  • மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்                        &… Read More
  • Hadis அல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக் காரியத்தைச் … Read More
  • ????? CV/Resume/Bio data Read More
  • Heart Attack இருதய தமனி நோய்  டாக்டர் ஜி. ஜான்சன்                 &… Read More