செவ்வாய், 26 மார்ச், 2019

5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ள வேட்பாளர்களின் சொத்து மதிப்பு! March 26, 2019

Image
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், பலரது சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் அசையும் சொத்து என 24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168 ரூபாய் எனவும் அசையா சொத்துகள் 22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரத்து 303 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி ஸ்ரீநிதி பெயரில் அசையும் சொத்துகள் 9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140 ரூபாய் என அசையா சொத்துகள் 22 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 413 ரூபாய் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான குற்றவழக்குகள் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடுத்துள்ள தலா இரண்டு வழக்குகள் இருப்பதையும் கார்த்தி சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு 417 கோடியே 49 லட்சம் ரூபாய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மொத்த கடன் தொகை 154 கோடியே 86 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது, தனது வேட்புமனுவில் தனக்கு 332 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், கடன் தொகையாக 122 கோடியே 53 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்

credit ns7.tv