credit ns7.tv
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தையும், இந்தியா 140வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐநாவின் சார்பு நிறுவனமான ''Sustainable Development Solutions Network'' 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஃபின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் இரண்டாம் இடத்தையும், நார்வே 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 10வது இடத்தையும், அமெரிக்கா 19வது இடத்தையும் பிடித்துள்ளன. மொத்தம் 156 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140வது இடத்தை பிடித்துள்ளது.