திங்கள், 11 மார்ச், 2019

இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழக பேரவையில் மொத்த பலம் எவ்வாறு இருக்கும்?... March 11, 2019

source ns7.tv

Image
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள், மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மறைவால், முறையே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளும் காலியாக உள்ளன. இவை தவிர முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சிறை தண்டனை  பெற்றதால், அவர் எம்.எல்.ஏவாக பணியாற்றிய ஓசூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவையின் மொத்த பலம் 213 இந்த 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், சட்டப்பேரவையின் மொத்த பலம் 231 ஆக உயரும் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி அதிமுக அரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. 
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருவர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரின் ஆதரவு, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கிடைக்காது என்று கூறப்படுவதால், ஆட்சியைத் தக்க வைக்க இடைத்தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது வெல்ல வேண்டிய சூழல், அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
ஒருவேளை 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால், அதன் பலம் சட்டப்பேரவையில் 115 ஆக உயரும். அப்போது ஆட்சியைப் பிடிக்க திமுகவிற்கு, மேலும் ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவு மட்டுமே தேவை என்பதால், அந்தக் கட்சி எளிதில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உருவாகும்.