கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற புகாரில், கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 6 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவருடன் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான நிர்மலா தேவியிடம் நீதிபதிகள் தனி அறையில் விசாரணை நடத்தினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை தமக்கு ஜாமீன் வழங்கவில்லை என நிர்மலாதேவி தெரிவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இதற்கு மேல்சாட்சிகளை கலைக்க வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதித்தனர்.
விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிபதிகள், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர்
credit ns7.tv