வெள்ளி, 29 மார்ச், 2019

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்தியா அளித்த ஆதாரங்களை நிராகரித்த பாகிஸ்தான்! March 29, 2019

Image
புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களில், 22 இடங்களிலும் தீவிரவாத முகாம்கள் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.  இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 22 இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய தரப்பில் ஆதாரங்கள் வழங்கப்பட்டன. 
எனினும் அதை ஆய்வு செய்த பாகிஸ்தான், இந்தியா கூறுவது போன்று தீவிரவாத முகாம்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த விளக்கம் மத்திய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

credit ns7.tv