வெள்ளி, 15 மார்ச், 2019

நியூசிலாந்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக சென்ற Masjidயில் துப்பாக்கிச்சூடு! March 15, 2019

Image
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் இன்று தொழுகைக்காக மஸ்ஜித் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நியூஸிலாந்திலுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் எனும் நகரிலுள்ள புகழ்பெற்ற மஸ்ஜித் அல் நூர் எனும் மஸ்ஜித்க்கு தொழுகைக்காக சென்றுள்ளனர். விடுதியில் பேருந்தில் அப்பகுதிக்குக் சென்ற கிரிக்கெட் வீரர்கள் மஸ்ஜித்க்குள் நுழைந்தபோது அப்பகுதியே இரத்த வெள்ளமாக இருந்துள்ளது. மேலும் அங்கு ராணுவவீரர் போல உடையணிந்த ஒருவர் மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருப்பதையும் பார்த்துள்ளனர். 
வெள்ளிக்கிழமை என்பதால் மஸ்ஜித்ல் துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் கிட்டத்தட்ட 300 முதல் 500பேர் இருந்திருக்கலாம் எனவும், துப்பாக்கிச்சூட்டில் கிட்டத்தட்ட 30 முதல் 50 பேர் கொல்லப் பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 
இதையடுத்து உடனடியாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களை தரையில் படுக்க வைத்து பத்திரமாக மீட்டு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நியூசிலாந்து போலீசார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். 
இந்த துர்சம்பவம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செய்தித்தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, "இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கிரிக்கெட் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் அவர்கள் வெளியில் எங்கும் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றும் கூறியுள்ளார். 

credit: ns7.tv