வெள்ளி, 31 ஜனவரி, 2020

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே?

2020-01-31@ 05:02:56







மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன?
* ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி

மதுரை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 8ம் வகுப்பு வரை பெயிலாகக்கூடாது என கட்டாய கல்விச்சட்டம் கூறும்போது, பொதுத்தேர்வு தொடர்பாக அரசின் நிலை என்ன என்று, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது. பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும். ஒவ்வொருவரும் கல்வியறிவு ெபற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணை சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். இந்த கல்வி ஆண்டில் அரசாணையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘பொதுத்தேர்வில் தோல்வி அடைவோர் 2 மாதத்திற்குள் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். குழந்தைகளுக்கு மறுதேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இடைநிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் இந்த நடைமுறை இல்லை. பல மாநிலங்கள் இதை பின்பற்றவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை’’ என்றார். அரசுத் தரப்பில், ‘‘தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வுகளின் மூலம் தேர்ச்சி பெற வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் வினாத்தாள் வழங்கப்படும் என்றால், விடைத்தாள்கள் எங்கு திருத்தப்படும்? இதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? எதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது? கட்டாய கல்வி சட்டம் 14 வயது வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என்கிறது. ஆனால், கட்டாயக்கல்வி சட்டத்துக்கு எதிராக இந்த பொதுத்தேர்வு முறை உள்ளதே? மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன? தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்’’ என சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

அரசுத் தரப்பில், விளக்கம் பெற்று பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கேட்கப்பட்டது. இதையடுத்து மத்திய சட்டத்துறை செயலர், மனிதவள மேம்பாட்டு அமைச்சக சார்பு செயலர், தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர், துவக்கக் கல்வி இயக்குநர், அரசு ேதர்வுகள் இயக்குநர், குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப். 19க்கு தள்ளி வைத்தனர்.
credit dinakaran.com

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம்

2020-01-31@ 08:06:26








புதுடெல்லி: டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலை கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. டெல்லியில் பெரிய அளவில் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். நேற்று மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர்.

அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களை நோக்கி சுட்டார். இதில் சதாப் பரூக் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன் வந்தான்:

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசாமி, கருப்பு உடையுடன் வந்துள்ளான். அவன், ‘யே லோ ஆசாதி’ (இதோ விடுதலையை எடுத்துக் கொள்ளுங்கள்) என்று சப்தமிட்டபடி, மாணவர்கள் மீது சுட்டுள்ளான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், ‘ஆசாதி’ (விடுதலை) என்ற வார்த்தையை அடிக்கடி முழக்கமிடுகின்றனர். அதை வைத்தே, துப்பாக்கியால் சுட்ட நபர், அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் துப்பாக்கி்ச்சூட்டை தடுக்காமல் டெல்லி போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் டெல்லி பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
credit dinakaran .com

ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

இந்தியர்களை இந்தியர்கள் என்று நிரூபிக்கச் சொல்வதற்கான அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

CAA மற்றும் NRC-க்கு எதிரான பேரணி, கேரளாவின் கல்பேட்டா நகரில் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். கல்பேட்டா நகரின் SKMJ உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, நகரின் பல்வேறு சாலைகள் வழியாகச் சென்று, மைதானத்தை அடைந்தது. 
Rahul Gandhi
அரசியல் சாசனத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி, காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கையும், நரேந்திர மோடியின் கொள்கையும் வேறு வேறு அல்ல என விமர்சித்தார்.  வேலைவாய்ப்பு பிரச்னை தலைவிரித்தாடுவது குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் வேறு ஏதாவது ஒரு பிரச்னையை ஏற்படுத்துபவராக நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
CAA மற்றும் NRC-யால் வேலை வாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்றும் ராகுல் காந்தி  கேள்வி எழுப்பினார். 

credit ns7.tv

SARS-ஐ மிஞ்சும் Corona வைரஸ்?: இந்தியாவிற்கும் பரவியது!

Image
டிசம்பர் 31ம் தேதியன்று முதல் முறையாக சீனாவின் Hubei மாகாண தலைநகர் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று கொடிய தொற்றுநோயாக மாறி சீனாவையும் கடந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை குணப்படுத்த வழி தெரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
கொரோனாவின் தோற்றம்:

விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படும் மார்க்கெட் ஒன்றிலிருந்து இந்த வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

corona
கொரோனா வைரஸ் தாக்குதலின் பிறப்பிடமான வுஹான் உள்ளிட்ட அண்டை நகரங்களை சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தனித்து வைத்துள்ளனர். இந்த நகரங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் பொதுமக்கள் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.

corona-virus
சீனா மட்டுமல்லாது தாய்லாந்த், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர், மகாவ், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிரான்ஸ், வியட்னாம், கனடா, ஜெர்மனி, இலங்கை, கம்போடியா, ஐக்கிய அரபு அமீரகம் என இந்த வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா:
இந்நிலையில் சீனாவில் உள்ள வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 பேரின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் சீனாவில் இருந்துவந்த அந்த மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்..
இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று இணைந்தது.
SARS-ஐ மிஞ்சிய Corona: 
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7,711 பேர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சீன மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2002-03 காலகட்டத்தில் SARS என்ற வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 5,327 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதையும் மிஞ்சும் வகையில் கொரோனா வைரஸின் பாதிப்பு பரவியுள்ளது. எனினும் சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு  774 பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளது. எனினும் சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.
credit ns7.tv

வியாழன், 30 ஜனவரி, 2020

இஸ்லாமியர்களின் தியாகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது யாரால்? எப்படி?


சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் தியாகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது யாரால்? எப்படி? வரலாற்று பேராசிரியர் - கருணாநந்தன் அவர்கள்

#உலக_அரங்கில்_தலைக்குனிவை_சந்திக்கும்_இந்திய_அரசு!


#உலக_அரங்கில்_தலைக்குனிவை_சந்திக்கும்_இந்திய_அரசு! (செய்தியும் சிந்தனையும் - 27-01-2020) உரை:- I .அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) #IndiaRejectsCAB #REJACT_CAA_NRC_NPR #Boycott #CAA #NRC #NPR #CountryAgainstBJP #RevokeCAA #ProtectConstitution #CAA_AgainstConstitution

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இருவர் சுட்டுக்கொலை..!


மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நகரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென வன்முறை ஏற்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டதில் மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசார்தான் காரணம் என முர்ஷிதாபாத் தொகுதி எம்.பியும், காங்கிரஸ் பிரமுகருமான அதிர்ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். 
protest
திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் தாஹிருதின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரம் காங்கிரசாரும், கம்யூனிஸ்ட் கட்சியினருமே இந்த வன்முறைக்கு காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குறை கூறியுள்ளனர்
credit ns7.tv

விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வம்புக்கு இழுத்த நகைச்சுவை கலைஞர்!

credit ns7.tv
Image
விமானத்தில் பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தொந்தரவு கொடுத்த நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவுக்கு முன்னணி விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
மும்பையில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது, தமது செல்போனில் படம்பிடித்தபடி அர்னாப் கோஸ்வாமியை வம்புக்கு இழுத்த குனால் கம்ரா, அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார். அர்னாப் கோஸ்வாமி இதை கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், குனால் கம்ரா தொடர்ந்து அவரை தரக்குறைவாக விமர்சித்தார். இந்த வீடியோவை குனால் கம்ராவே சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் குனால் கம்ரா, தங்கள் விமானத்தில் பயணிக்க 6 மாதம் தடைவிதிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. இண்டிகோ-வை தொடர்ந்து ஏர் இந்தியா, Go Air, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை குனால் கம்ராவை தங்களது விமானங்களில் அனுமதிக்க மாட்டோம் என தடை விதித்துள்ளன. 
குனால் கம்ரா மீதான இந்தத் தடை ஒரு அநீதியான செயல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

கல்வி புரட்சி

credit ns7.tv
Image
தனி ஒருவராக கல்வி புரட்சி செய்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹஜப்பா, சந்தையில் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வருகிறார். ஆரஞ்சு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, அரசு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் அதே பகுதியில் உள்ள MASJID-ல் 1999-ம் ஆண்டு ஆரம்ப பள்ளியை கட்டினார்.
Padma Shri Award Winner
ஹஜப்பாவின் தொடர் முயற்சியால் அந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. பள்ளியை கட்டியதோடு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு ஹஜப்பாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

புதன், 29 ஜனவரி, 2020

அதிரவைக்கும் #CoronaVirus தாக்குதல்: லேட்டஸ்ட் அப்டேட்!

credit ns7.tv
Image
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சீனாவையும் கடந்து இந்த வைரஸ் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் இந்த கொரோனா வைரஸ் குறித்து என்னவெல்லாம் நிகழ்வுகள் தற்போதைய சூழலில் அரங்கேறியுள்ளன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.
தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது, இதில் 100 பேர் ஹூபே மாகாணத்தில் மட்டுமே பலியாகி உள்ளனர். ஹூபே மாகாண தலைநகரான வுஹானில் தான் இந்த வைரஸ் தோன்றியதாக தெரியவந்தது. இந்த வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் 4,515 பேர்.
சீனா தவிர்த்து இந்த வைரஸ் தாக்குதலுக்கு தாய்லாந்த் மற்றும் ஹாங்காங்கில் தலா 8 பேரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் மகாவில் தலா 5 பேரும், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியாவில் தலா 4 பேரும், பிரான்ஸில் மூவரும், வியட்னாம் மற்றும் கனடாவில் தலா இருவரும், ஜெர்மனி, இலங்கை மற்றும் கம்போடியாவில் தலா ஒருவரும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
corona
சீனா தவிர்த்து எந்த நாட்டிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு யாரும் பலியாகவில்லை.
1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரின் விலங்கினங்களின் மாமிசம் விற்பனை செய்யும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வுகான் நகரில் இரண்டு பெரிய மருத்துவமனைகளை அவசர நோக்கில் சீனா கட்டமைத்து வருகிறது.
வுஹான் உட்பட சுமார் 15 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டு, சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவுக்கு மருத்துவ அவசர நிலை என்றாலும் உலகளவில் அவசர நிலையாக இன்னும் மாறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

corona-virus
2002-03ல் சுமார் 800 பேரை பலிகொண்ட Severe Acute Respiratory Syndrome (SARS) அல்லது 2012ல் சுமார் 700 பேரை பலிகொண்ட Middle East Respiratory Syndrome (MERS) போன்று கொரோனா வைரஸ் ஆபத்தானதாக மாறாது என்று சில நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு யாரும் உள்ளாகவில்லை என்றாலும் சீனாவில் இருந்து சொந்த நாடு திரும்பும் பயணிகளுக்கு கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 
திருச்செந்தூர் அருகே உடன்குடியிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30,00,000  மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இரண்டு இடங்களுக்கும் மேல் ராக்கெட் ஏவுதளங்கள் இருப்பதாக கூறிய அவர், நம் நாட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் ராக்கெட் ஏவுதளத்தினை அமைத்து வளர்சியடைய வேண்டும் என்றார். 
Students
மேலும் தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு உறுதிபடுத்தியிருப்பது வருந்தத்தக்கது என்றும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் விமர்சித்தார். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தமிழக அரசு மூர்க்கமாக கட்டாயமாக மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வை திணிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடும் என்று கூறினார். மேலும் இளம் வயதிலேயே மாணவர்கள் மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும் என்பதால் இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானதே தவிர ஈகோ தொடர்பானது அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் ஈகோ பார்க்காமல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
credit ns7.tv

பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி

credit ns7.tv
Image
குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைபாட்டை எடுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரஷாந்த் கிஷோர் கட்சியிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததில் இவரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இவர் தேர்தல் உத்திகளை வகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. 
தேர்தல் உத்தியாளராக விளங்கும் அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மக்கள் தொகை பதிவேடிற்கு எதிராகவும் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக பேசி வருவதுடன், டிவிட்டர் பக்கத்திலும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
இதன் காரணமாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பிய போது, அவர் தேர்தல் உத்தியாளராக சில கட்சிகளுக்கு பணியாற்றி வருகிறார், அவர் இக்கட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் கட்சியின் அடிப்படை கட்டுமானங்களுக்கு இசைந்து செல்ல வேண்டும். அவர் கட்சியில் இருப்பதென்றால் இருக்கட்டும், விலகவேண்டுமென்றாலும் சரிதான்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் எப்படி இணைந்தார் என்று தெரியுமா? அமித்ஷா கேட்டுக்கொண்டதால் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார்.” இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
இதன் மூலம் பிரஷாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தில் நீடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

credit ns7.tv
Image
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிறுபான்மை மக்களுக்காக மட்டுமல்லாமல், அனைவருக்காகவுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க அரசு எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். 
WB
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் இந்து சகோதரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதில் 4வது மாநிலமாக மேற்கு வங்கம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தின் சட்ட மேலவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றம்..!

Image
சட்ட மேலவையை கலைத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 133 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்காக அம்மாநில அரசு இயற்றிய மசோதாவை, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அம்மாநில சட்ட மேலவை அனுப்பியதை அடுத்து, தற்போது சட்ட மேலவை கலைக்கப்பட்டது. 
Jegan
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சட்ட மேலவைக்காக ஆண்டுதோறும் 60 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவை இயற்றும் மசோதாக்களை தடுக்கும் பணியில் ஈடுபடும் சட்ட மேலவைக்கு செலவு செய்வது வீண் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
credit ns7.tv

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
photo
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஸ்வீட்டர் என்பவரின் விசைபடகை பறிமுதல் செய்ததோடு 11 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் கங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

credit ns7.tv

தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு, கைவினைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IAS
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ,  உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணைச்செயலாளராக டி.மணிகண்டனும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக கே.பி.கார்த்திகேயனும், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகரும் மாற்றப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ்பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஃபைர்நெட் கழகத்தின் துணை செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
credit ns7.tv

மத்திய அரசுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட போடோலாந்து..!

credit ns7.tv
Image
போடோலாந்து தனி நாடு கோரி போராடி வந்த தடை செய்யப்பட்ட அமைப்பான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, மத்திய அரசுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் முன்னிலையில் இதற்கான உடன்படிக்கை இன்று கையெழுத்தானது. இதில், மத்திய அரசும், அசாம் மாநில அரசும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் 9 பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கையெழுத்திட்டனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பேசிய அமித் ஷா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையின் காரணமாக அசாம் மற்றும் போடோ மக்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என குறிப்பிட்டார். 
BODO
மத்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 1550 பேர், அவர்களிடம் உள்ள 130 ஆயுதங்களுடன் வரும் 30ம் தேதி சரணடைவார்கள் எனவும் அமித் ஷா கூறினார். போடோலாந்து தனிநாடு கோரி கடந்த 27 ஆண்டுகளாக இந்த அமைப்பு போராடி வந்தது. இந்த அமைப்பின் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 2823 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திங்கள், 27 ஜனவரி, 2020

154 ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் அதிர்ச்சியூட்டும் CAA எதிர்ப்பு தீர்மானத்தை உருவாக்குகின்றனர்

154 ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் அதிர்ச்சியூட்டும் CAA எதிர்ப்பு தீர்மானத்தை உருவாக்குகின்றனர்
CAA இன் கடுமையான கண்டனத்தில், சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய முறையான ஐந்து பக்க தீர்மானத்தை வரைந்துள்ளனர்.

இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) "உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும் மற்றும் பரவலான மனித துன்பங்களை ஏற்படுத்தும்" என்று 154 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சக்திவாய்ந்த குழு எச்சரித்துள்ளது.

CAA இன் கடுமையான கண்டனத்தில், சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய முறையான ஐந்து பக்க தீர்மானத்தை வரைந்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட தீர்மானம் CAA ஐ "பாரபட்சமான மற்றும் ஆபத்தான முறையில் பிளவுபடுத்தும்" என்று விவரிப்பது மட்டுமல்லாமல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) மற்றும் புது தில்லி கையெழுத்திட்ட பிற மனித உரிமைகள் ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவின் "சர்வதேச கடமைகளை" மீறுவதாகவும் விவரிக்கிறது.


154 சட்டமியற்றுபவர்கள் 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த MEP களின் முற்போக்கான மன்றமான 'எஸ் அண்ட் டி குழுமத்தைச் சேர்ந்தவர்கள், இது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கூட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் நேர்மை போன்ற ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்த வரைவுத் தீர்மானம் சட்ட அமலாக்க அதிகாரிகளால் படை மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கோட்பாடுகளையும் சுட்டிக்காட்டுகிறது, இது இந்தியாவும் பிணைக்கப்பட்டுள்ளது.

CAA இன் தத்தெடுப்பு “இது செயல்படுத்தப்படுவதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது, இதில் 27 பேர் இறந்தனர், 175 பேர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்திய அரசு இணைய பணிநிறுத்தங்களுக்கு உத்தரவிட்டதாகவும், ஊரடங்கு உத்தரவுகளை விதித்து, வரம்புகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான போராட்டங்களைத் தடுக்க பொது போக்குவரத்து ”.

மேலும், “குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன”.

வரைவுத் தீர்மானம் 2020 ஜனவரி 5 ஆம் தேதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்கள் சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவகம் (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டனர், அதில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர் பல்கலைக்கழகம்.


காவல்துறையினர் இந்த தாக்குதலுக்கு சாட்சியாக இருந்ததாகவும், அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் மறுத்துவிட்டதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இது குறித்து ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஏற்கனவே CAA மற்றும் அது தூண்டிய வன்முறை குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது . ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், CAA ‘இயற்கையில் அடிப்படையில் பாரபட்சமானது’ என்று கவலை தெரிவித்ததாக அது மேற்கோளிட்டுள்ளது.

ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோர் இயற்கைமயமாக்கல் மற்றும் பதிவு மூலம் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு ஏதுவாக CAA திருத்தப்பட்டதாக எஸ் அண்ட் டி குழு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ப ists த்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தகுதிகளை CAA கட்டுப்படுத்துகிறது. மற்ற மத குழுக்களின் அதே விதிகளுக்கு ”, என்று அது கூறுகிறது.

மேலும், CAA இல் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாடுகள் என்று இந்திய அரசு கூறியுள்ள நிலையில், சிறுபான்மை மதங்கள் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் இதை விரைவாக கண்காணிக்கும் குடியுரிமைக்கான நியாயமாகப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது பங்களாதேஷ், பூட்டான், பர்மா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் - “இன்னும் CAA இலங்கை தமிழர்களை தனது எல்லைக்குள் கொண்டுவரவில்லை, அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய அகதிக் குழுவை உருவாக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வசித்து வருகின்றனர்”.

மேலும், மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை CAA விலக்குகிறது, அவர்கள் அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்; பாக்கிஸ்தானில் உள்ள அஹ்மதிகள், பங்களாதேஷில் உள்ள பிஹாரி முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தானின் ஹசாராக்கள் ஆகியோரின் அவலநிலையையும் புறக்கணிக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

எஸ் அண்ட் டி குழுமத்தின் கூற்றுப்படி, CAA இந்தியாவின் சொந்த அரசியலமைப்பின் 14 வது பிரிவுக்கு முரணானது, இது ஒவ்வொரு நபருக்கும் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது மற்றும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

இதன் விளைவாக, திருத்தப்பட்ட சட்டம் “மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான மாநாடு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, இது இந்தியா ஒரு மாநிலக் கட்சியாகும், இது இன, இன அல்லது அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்கிறது. மத அடிப்படையில் ”.

நாடு தழுவிய குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறைக்கு (என்.ஆர்.சி) அரசாங்கத்தின் உந்துதலின் போது CAA இயற்றப்பட்டதாக வரைவுத் தீர்மானம் கூறுகிறது. “இந்துக்கள் மற்றும் பிற முஸ்லிமல்லாதவர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் முஸ்லிம்களின் குடியுரிமை உரிமைகளை அகற்றுவதே என்.ஆர்.சி செயல்முறையின் நோக்கம்” என்று அரசாங்கத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்தின ”மற்றும்“ அதேசமயம் என்.ஆர்.சி-யில் சேர்க்கப்படாத முஸ்லிம்கள் வெளிநாட்டினருக்கு உதவ வேண்டும் ’

Credit : https://www.nationalheraldindia.com/india/154-european-union-lawmakers-draft-stunning-anti-caa-resolution

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்!

Image
ஹைட்ரோ கார்பன், மதுக்கடை, 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
photo
நாடு முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, மக்களை மதரீதியாக பிளவு படுத்தக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, மாணவர்களின் கல்வியை பாதிக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
photo
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி ஊராட்சிகுட்பட்ட குன்னங்குடிபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சியில் செயல்படும் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பெரும்பாலான பெண்கள் முன்வைத்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
photo
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இடுகாடு பிரச்சனையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் கிராம சபை கூட்டம் தொடர்ந்தது.
photo
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ்சிடம் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதனை அவர் ஏற்க மறுத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
photo
திருவாரூர் அருகே பெரும்புகலூர், அடியக்கமங்கலம் ,வரம்பியம், கொத்தமங்கலம் ,கோட்டூர்  உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
credit ns7.tv

CAA-க்கு எதிராக கேரளாவில் மனித சங்கிலி போராட்டம்...!

Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கேரளாவில் சுமார் 700 கிலோமீட்டர் தூர மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று, களியக்காவிளையில் இருந்து காசர்கோடு வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
கேரளாவில் மனித சங்கிலி போராட்டம்
சுமார் 700 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில்., கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றார். இந்த போராட்டத்தில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  
credit ns7.tv

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

இந்தியா - பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்த 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனரோ பங்கேற்க உள்ளார்.  இதனையொட்டி தலைநகர் டெல்லி வந்த அவரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபருக்கு, பாரம்பரிய முறைப்படி படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
News7 Tamil
அதன்பின் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின்  நினைவிடத்திற்கு சென்ற பிரேசில் அதிபர் பொல்சனரோ, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை, பிரேசில் அதிபர் பொல்சனரோ சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினர். 
பின்னர், இருநாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடனான மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
credit ns7.tv

அதிக மின்சாரம் உற்பத்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் புதிய சாதனை!


Image
கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9,400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளது என்று வளாக இயக்குநர் சஞ்சய்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில் செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் வைத்து 71வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சஞ்சய் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்பு அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள 21 அணு மின் நிலையங்கள் மூலம் 2019 - 2020ம் ஆண்டில் இந்திய அணுமின் கழகம் சார்பில் 38,575 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9,400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவே அணுமின் உற்பத்தி வரலாற்றில் உச்சபட்ச மின் உற்பத்தி ஆகும் என்றார். இந்தியாவில் 6 அணு உலைகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் இரண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் இரண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ராபூர் அணுமின் நிலையத்திலும் இரண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராவ்த்பாட்டா அணுமின் நிலையத்திலும் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளும் ஹரியானா மாநிலத்தில் கோரக்பூரில் 2 அணு உலைகளும்விரைவில் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது என்றார்.
அதோடு, கூடங்குளத்தில் 6 அணுமின் நிலையங்களும் செயல்படும்போது இந்திய அணுமின் கழகத்தின் அதிக மின் உற்பத்தி செய்யப்படும் இடமாக கூடங்குளம் திகழும். கூடங்குளம் முதல் அணு உலையில் தற்போது 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணிக்காக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நடப்பாண்டில் கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து 81%மும், இரண்டாவது அணு உலைகளிலிருந்து 93% மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது கூடங்குளம் அணுமின் நிலைய வரலாற்றில் உச்சபட்சமாகும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ரஷ்ய, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அணுமின் நிலைய ஊழியர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
credit ns7.tv

திமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்!

Image

திமுகவின் முதன்மைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் பொதுச்செயலாளருக்கு உதவும் வகையில் முதன்மைச்செயலாளர் பொறுப்பு கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த பொறுப்பிற்கு துரைமுருகன் நியமிக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளுக்கு இடையேயான உட்கட்சி பூசல்களை பேசி தீர்க்கக்கூடிய பொறுப்பாக உள்ள நிலையில், அந்த பொறுப்பில் இருந்த டி.ஆர் பாலு விடுவிக்கப்பட்டுள்ளார். 
அவர் நாடாளுமன்ற குழு தலைவராக உள்ளதால் விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். டி.ஆர். பாலு வசம் இருந்த பொறுப்புக்கு, திருச்சி தெற்கு மாவட்டச்செயலாளராக உள்ள கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் குறித்த அறிவிப்புகளும் அடுத்து வரும் நாட்களில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
credit ns7.tv

அரசுப் பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச் சாவடி!

Image
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்துக்கு சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றியதால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். 
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்துக்கு, செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. 
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன. 
Chengalpattu Toll plaza
இந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதையடுத்து, அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். சுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள்  தரக்குறைவாக நடந்துகொள்வதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 
credit ns7.tv

அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுகிறது: வைகோ

Image
மக்கள் கருத்துக்களை கேட்க கூடாது என பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முன் எப்போதும் விட தற்போது அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார். இந்தி தான் இந்தியாவின் உச்சம் எனவும் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருவதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை நாட்டு மக்கள் உட்பட நடுநிலையாக இருப்பவர்கள் கூட எதிர்க்க வேண்டிய நிலைமை வந்து உள்ளதாக குறிப்பிட்டார்.  

ஹைட்ரோகார்பன் உட்பட எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் கருத்தை கேட்காமல் பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக குற்றம் சாட்டினார். பெரியாரின் சிலையை திருட்டுத்தனமாக உடைக்கும் கயவர்களால் அவரது புகழை மறைக்க முடியாது எனவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.

credit ns7.tv