வியாழன், 23 ஜனவரி, 2020

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவு!


Image
தமிழகத்தில் இருந்து 2020ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைவிட 17 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெயிட்டுள்ள தகவலில் 2020ஆம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 
Neet Exam
2018-2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 
கட் ஆஃப் மதிப்பெண் உயர்வு, ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பித்திருப்பதால் தங்களுக்கான வாய்ப்பு குறைவு என்ற எண்ணம். குறைந்தளவிலான மருத்துவ இடங்கள் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 
நீட் தேர்வு
கட் ஆஃப் மதிப்பெண் உயர்வது மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக உள்ளது. எனவே 12ஆம் வகுப்புக்கு பிறகு நீட் தேர்வை எதிர்கொள்ள ஓராண்டு ஒதுக்க வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி 4 ஆயிரத்து 202 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதில் 70 சதவீதம், அதாவது 2 ஆயிரத்து 916 மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆவர்.

credit ns7.tv